தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கதர் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். வினா-விடை நேரத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கதர் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறினார்.