தாலிக்கு தங்கம் முதல் கொரோனா வரை... "அதிமுகவுக்கு சிக்கல்..?" - சென்னை மாநகராட்சி குற்றச்சாட்டு

Update: 2023-07-23 13:59 GMT

கடந்த அதிமுக ஆட்சியில், திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் சுமார் 5,000 கிராம் தங்கம் வழங்கியதில் 2 கோடியே 62 லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி குற்றம்சாட்டியுள்ளது

சென்னை மாநகராட்சியின் கணக்கு நிலைக் குழுவின் ஆய்வில் கடந்த 2018 -19 நிதியாண்டில், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தில் 2.62 கோடி ரூபாய் மற்றும் 4,872 கிராம் தங்கம் வழங்கியதில் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கு நிலைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல், 2020-21-ம் ஆண்டில் கோவாகிசின், கோவிஷீல்டு மருந்துகள் இலவசமாக எந்தெந்த தனியார் மருத்துவமனைகளுக்கு, எவ்வளவு வழங்கப்பட்டந என்பது குறித்த விவரங்கள் இல்லை என்றும், கொரோனா ஆய்வகத்திற்கு கருவிகள் வாங்கியதில் 47.17 லட்சம் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்