"மருத்துவர்களின் கவக்குறைவால் பிறந்த குழந்தைக்கு எலும்பு முறிவு" - கதறி அழும் தந்தை

Update: 2023-01-23 23:27 GMT

Full View


தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் - மந்த்ரா தம்பதிக்கு, கடந்த 12-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

நீண்ட நாட்களாக குழந்தை அழுதுவந்த நிலையில், குழந்தையின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினரின் உறவினர்கள், அலட்சியமாக இருந்ததாக கூறி மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்பு அலட்சியமாக நடந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்