இந்திய வரலாற்றில் முதல் முறையாக போர் முனையில் பெண்கள் - வழியனுப்பி வைக்கும் நம்ம சென்னை..!
இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக, 5 பெண்கள் பீரங்கி படை பிரிவில் பணியமர்த்தப்படவுள்ளனர். வரும் 29 ஆம் தேதி, சென்னை OTA யில் நடைபெறும் பயிற்சி நிறைவு விழாக்கு பின்,போர் முனையில் பீரங்கி படையில் பணியாற்றுவதற்காக, 5 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1895 ஆம் ஆண்டு இந்திய ராணுவ படை உருவாக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை போர் முனைகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.