"என் பைக்குக்கு ரூ. 10,000 ஃபைன்-ஆ?" - கடும் கோபத்தில் போதை ஆசாமி செய்த செயல்... எரிந்து சாம்பலான போலீசார் பைக்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த சாம்பவலசை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், புதிய மோட்டார் வாகன சட்டப்படி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு, வாகனத்தை எடுத்து செல்ல அறிவுறுத்தி உள்ளனர். 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட முடியாததால், மன உளச்சலில் இருந்த தமிழ்செல்வன், காங்கேயம் புறக்காவல் காவல் நிலையம் முன்பாக நின்றிருந்த இரண்டாம் நிலை காவலர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில், அந்த வாகனம் முழுவதும் சேதமடைந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.