ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை முயற்சி..! தேடும் தீயணைப்பு வீரர்கள்..

Update: 2023-07-06 07:21 GMT

கேரள மாநிலம் மலப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், மூதாட்டியையும், அவரது பேத்தியையும் இரண்டாவது நாளாக வீரர்கள் தேடி வருகின்றனர்.

மலப்புரத்திலுள்ள, நிலம்பூர் அமரம்பலம் அருகே 3 குழந்தைகள் மற்றும் வயதான தாயுடன் வசித்து வந்த பெண், நால்வரையும் அழைத்துகொண்டு அருகில் உள்ள கொதிரிபுழா ஆற்றில் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், இரு குழந்தைகள் கரையேறி தப்பித்த நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில், குழந்தைகளின் தாயை மீட்டு பாதுகாப்பாக கரையேற்றினர். இந்நிலையில், மாயமான 60 வயது மூதாட்டி சுசீலா மற்றும் அவருடைய பேத்தியான அனுஸ்ரீ என்ற 12 வயது சிறுமியை வீரர்கள் வலை வீசி தேடியும் கிடைக்காதது சோகத்தை ஏற்படுத்தியது. தீயணைப்புபடை வீரருடன் சேர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் இருவரையும் தேடி வரும் நிலையில், தேடுதல் பணி இரண்டாவதுநாளாக நீடித்திருப்பது அப்பகுதியை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்