மீன்பிடித் தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு - தூத்துக்குடியில் பரபரப்பு
- தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்களின் போராட்டத்தின்போது, போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்து நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் துணை ஆட்சியர் கௌரவ் குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, மீன்பிடித் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.
- அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பிரச்சினைக்கு சுமூக முடிவு வரும் வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என்று கூறிவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர்.