"அப்பாவுக்கு விபத்து.. வழி விடுங்க..".. ATM-க்குள் அரக்க பறக்க வந்த பெண் - பரிதாபப்பட்டு வழிவிட்டவருக்கு பறிபோன பணம்

Update: 2023-04-30 03:15 GMT

சிவகங்கையில் 10க்கும் மேற்பட்ட ஏடிஎம்மில் நூதன முறையில் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்..

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்புவனத்தில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற நிலையில், காளிதாஸை பெண் ஒருவர் நோட்டமிட்டு வந்துள்ளார். அப்போது, திடீரென ஏடிஏம்மினுள் புகுந்த அவர், தந்தை விபத்தில் சிக்கியுள்ளார் எனவும், அவசரமாக பணம் எடுக்க வேண்டும் எனவும் கூறி ஏடிஎம்மில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதில், காளிதாஸின் ஒரிஜினல் ஏடிஏம் கார்டை எடுத்து விட்டு, போலி ஏடிஎம் கார்டை கைமாற்றி பெண் தப்பியுள்ளார். இதையடுத்து, வேறோரு ஏடிஎம் சென்ற அவர், காளிதாஸின் வங்கி கணக்கில் இருந்து 13 ஆயிரம் ரூபாய் வரையிலான பணத்தை திருடியதை அறிந்து காளிதாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தி வந்த போலீசார் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மணிமேகலை என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட ஏடிஎம்மில் இதே பாணியில் மணிமேகலை கைவரிசை காட்டியது தெரிய வர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்