விவசாயி டூ அதிமுக பொதுச்செயலாளர்.. பாதியில் நின்ற கல்லூரிப் படிப்பு.. எம்.ஜி.ஆர்-ஆல் அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்த ஈபிஎஸ்

Update: 2023-05-12 04:34 GMT

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1954ல் பிறந்தார். பள்ளிப் படிப்புபை முடித்த பின், ஈரோடு வாசவி கல்லூரியில் விலங்கியல் துறையில் சேர்ந்த இவரின் கல்லூரிப் படிப்பு பாதியில் நின்றது.

பின்னர், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருக்கும் சந்தைகளில் வெல்ல வியாபாரம் செய்து வந்தார். எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றால் இளம் வயதிலேயே அதிமுகவில் இணைந்தார்.

1974ல் கோணேரிப்பட்டி அதிமுக கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பழனிசாமி, 1990ல் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளராகவும், 1991ல் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும் நியமிக் கப்பட்டார்.

1993ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தின் தலைவராகவும், 2001ல் தமிழ்நாடு சிமென்ட் கார்ப்ப ரேஷன் தலைவராகவும், 2006ல் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் படிப்படியாக உயர்ந்தார்.

1989 மற்றும் 1991 சட்டமன்ற தேர்தல்களில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998 நாடாளுமன்ற தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2011ல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின், நெடுஞ்சாலை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014ல் அதிமுத தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2016 சட்டமன்ற தேர்தலில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நெடுஞ்சாலை துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார்.

2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த பின், ஒ.பன்னீர் செல்வம் முதல்வரானார். அவரின் அமைச்சரவையில், நெடுஞ்சாலை துறை அமைச்சராக தொடர்ந்தார்.

2017 பிப்ரவரியில், ஒ.பன்னீர்செல்வம் பதவி விலகிய பின், தமிழக முதல்வராக பதவியேற்றார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பின், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவரானார்.

2022 ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 மார்ச் 28ல்

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த தினம், 1954, மே 12.

Tags:    

மேலும் செய்திகள்