சட்டீஸ்கரில் லீனா நக்வன்சி என்ற பெண் யூடியூபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராய்கர் மாவட்டத்தை சேர்ந்த அவர், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர். பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் லீனா, தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லீனா பதிவிட்டிருந்த வீடியோக்களில் பலர் இரங்கல் தெரவித்து வருகின்றனர்.