பைக் ஓட்டும் போது பேஸ்புக் லைவ் - இளைஞருக்கு அதிகாரிகள் கொடுத்த வினோத தண்டனை
கேரள மாநிலத்தில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது பேஸ் புக் லைவில் வீடியோ பதிவு செய்த இளைஞரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் நாயர்பாறையைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவர், இருசக்கர வாகனம் ஓட்டும் போது அதனை,வீடியோ எடுத்து பேஸ்புக் லைவில் ஷேர் செய்துள்ளார். இதுக்குறித்து இடுக்கி மோட்டார் வாகனத்துறை ஆய்வாளரின் கவனத்திற்கு சென்ற நிலையில், ஆபத்தான முறையில் லைவ் செய்த இளைஞரின் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ததுடன், இடுக்கி மருத்துவக் கல்லூரியில் மூன்று நாட்கள் சமூக சேவை செய்ய உத்தரவிட்டுள்ளார்.