சென்னை, விமான நிலைய பார்க்கிங் பகுதியில் இருந்து, வாகனங்களை வெளியே எடுப்பதில் தாமதமாகும் நேரத்திற்கும் சேர்த்து, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இங்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் அடுக்குமாடி பார்க்கிங் வசதி பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையால், வாகனங்களை ஒழுங்குபடுத்தி விரைவாக எடுக்க முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். இதனால், ஏற்படும் காலதாமதத்திற்கும் சேர்த்து டோல்கேட் ஊழியர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.