ஆளுநருக்கு அதிரடியாக ட்வீட் மூலம் பதிலடி கொடுத்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

Update: 2023-04-07 13:29 GMT

நிலுவையில் உள்ள மசோதாக்கள் பற்றி, தமிழக ஆளுநர் அளித்த விளக்கத்திற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து டிவீட் செய்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் சிலவற்றிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் இதுவரை அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். நிலுவையில்வைத்துள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், அவை இறந்து விட்டன் என்பதே இதற்கு அர்த்தம் என்று தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க, அல்லது அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து, திருப்பி அனுப்ப மட்டுமே ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக ப.சிதம்பரம் டிவீட் செய்துள்ளார். ஒரு காரணமும் சொல்லாமல், ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தால், ஜனனாயகம் அங்கு செத்து விட்டது என்று அர்த்தம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். இரண்டாவது முறையாக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல்சட்டம் சொல்வதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்