தாய் யானையை தொலைத்த இடத்திற்கு தினமும் வந்து வந்து பார்க்கும் குட்டி - ரணமாக்கும் காட்சிகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உலா வரும் குட்டியானையை தாயுடன் சேர்த்து வைக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் ஆங்காங்கே குழுக்களாக முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் கூட்டத்திலிருந்து இரண்டு நாட்களாக தாயிடம் இருந்து குட்டி யானை சாலையில் உலா வருகிறது. தாயை தொலைத்த இடத்தை தேடி குட்டி யானை, வந்த நிலையில், தாய் யானை தென்படுகிறதா என உயர்ந்த மரத்தில் ஏறி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.