அலுவலகத்தில் நுழைந்து பெண் வட்டாட்சியருக்கு மிரட்டல்? - 8 பேர் மீது பாய்ந்த வழக்கு

Update: 2023-04-23 15:40 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், வட்டாட்சியர் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, பெண் வட்டாட்சியரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கும்மிடிப்பூண்டி பெண் வட்டாட்சியர் பிரீத்தி என்பவரை, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒரு சிலர் பணி செய்யவிடாமல் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதவிர நிலப்பிரச்சினை தொடர்பாக வந்த மேலும் சிலர், வட்டாட்சியர் அனுமதியின்றி அவரது அறைக்குள் நுழைந்து, அவதூறாக பேசியதுடன், அவரை கோபமூட்டும் வகையில் பேச வைத்து, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வட்டாட்சியர் பிரீத்தி அளித்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சத்யா, நந்திவர்மன் ஆனந்தன், அருள் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்