"தாய் மொழியில் கல்வி கற்பதே சிறந்தது" தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Update: 2022-09-10 16:12 GMT

தாய் மொழியில் கல்வி கற்பதே சிறந்தது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் உள்ள தனியார் பள்ளியில், வித்யா பாரதி தமிழ்நாடு என்ற அமைப்பு சார்பில், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவது குறித்த கருத்தரங்கு நடைப்பெற்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தற்போது இந்தியாவில் தாய்மொழி வழிக் கல்வி இல்லை என்றும், நாம் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினார்.

எனவே, அவரவர் தாய் மொழியில் கல்வி கற்பது நல்லது என்றும், அதன் மூலம் இந்தியாவின் அறிவு களஞ்சியத்தை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்