"உச்சநீதிமன்றம் குடுத்த ஆர்டர்ல மேகதாது என்ற வார்த்தை கிடையாது"அமைச்சர் துரைமுருகன் பேட்டி
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டப்போவதாக சொல்லும் இடம், தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்றும், அங்கு அணை கட்ட முடியாது எனவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார். இதற்காக இன்று டெல்லி செல்லும் அவர், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய இந்த டெல்லி பயணம், மேகதாது அணை விவகாரம் தொடர்பானது அல்ல என்றும், தமிழ்நாட்டிற்கு இன்னும் கூடுதலாக காவிரி நீர் திறந்து விடக்கோரி வலியுறுத்த உள்ளதாகவும், குறிப்பிட்டார்.