கனவா? நிஜமா?.. தலைகீழான தலைநகர்... நம்ம சென்னையா இது.. அப்படியே மாறிடுச்சே - காலையிலே ஒரு குட் நியூஸ்..!
சென்னையில் சாலை விபத்துகளில் பலியானவர்கள் எண்ணிக்கை 2023ன் முதல் ஆறு மாதங்களில் 10 சதவீதம் குறைந்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
சென்னை மாநகரில் உள்ள சாலைகளின் மொத்த நீளம் 2,780 கிலோ மீட்டர். மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியுள்ளது. தினமும் சுமார் 1,100 புதிய வாகனங்கள் வாங்கப்படுகின்றன.
2022 ஜனவரி முதல் ஜூன் 20 வரை, சென்னையில், 238 சாலை விபத்துகளில் 240 பேர் பலியானார்கள் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 20 வரை, 214 விபத்துகளில், 216 பேர் பலியாகியுள்ளனர். 2022இன் முதல் ஆறு மாத அளவை விட இது 10 சதவீதம் குறைவு.
2021 ஜனவரி முதல் ஜூன 20 வரை 265 விபத்துகளில், 269 பேர் பலியாகியுள்ளனர். அந்த வகையில் 2023 இன் முதல் ஆறு மாத அளவை விட 19.7 சதவீதம் குறைவு.
ஜி.ஐ.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சாலை விபத்துகள் மிக அதிக அளவில் நடக்கும் 104 இடங்கள் கண்டறியப்பட்டு, ஒரு கோடி ரூபாய் செலவில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில், 156 சிறப்பு சோதனை மையங்கள் மூலம் 14,158 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, 14.64 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில், 1.99 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் தீர்க்கப்பட்டு, 8.4 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.