"மைக்கில் எப்படி பேசணும்னு தெரியாதா உங்களுக்கு" - அரசு அதிகாரியை கண்டித்த கலெக்டெர்
கிருஷ்ணகிரி அருகே 4 வயது பேத்தியுடன் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்த முதியவரிடம் இருந்து, குழந்தை கடத்தி செல்ல முயன்ற நபர், குழந்தையின் அழுகுரலால் குழந்தையை தோட்டத்தில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் வெங்கடாசலம் என்ற முதியவர் தனது 4 வயது பேத்தியுடன் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது, முதியவரிடம் இருந்து குழந்தையை கடத்தி செல்ல முயன்ற மர்ம நபர், குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு விழித்த முதியவருக்கு பயந்து, குழந்தையை அருகில் உள்ள தோட்டத்தில் வீசி தப்பியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடாசலம் அக்கம் பக்கத்தினரை கூச்சலிட்டு அழைத்த நிலையில், தோட்டத்தில் வீசப்பட்ட பேத்தியை மீட்டிருக்கிறார். இதனிடையே, தோட்டத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்த முனியப்பன் என்ற முதியவரை தாக்கி, தோட்டத்திலிருந்த பம்பு செட் உள்ளிட்ட சில பொருட்களை மர்மநபர் திருடி சென்றதும் தெரியவந்தது. உடனே, படுகாயமடைந்த முதியவர் முனியப்பனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பொதுமக்கள், போலீசில் புகார் தெரிவித்த நிலையில், மர்மநபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.