"வட மாநிலத்துக்கு கொண்டு செல்ல வேண்டாம்..."சொன்னதை நிறைவேற்றுமா தமிழக அரசு?
- தமிழகம் முழுவதும் குறிப்பாக கொங்கு மண்டலமான ஈரோட்டில் நாளொன்றுக்கு ஒரு கோடி மீட்டருக்கு மேல் ரயான் துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
- இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இலவச வேட்டி சேலை உற்பத்தி காரணமாக ரயான் துணி உற்பத்தி குறைந்தது. லாபம் இல்லாவிட்டாலும் சீராக விலை கொடுத்து வட இந்திய வியாபாரிகள் துணிகளை கொள்முதல் செய்து வந்தார்கள்.
- பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரம்ஜான் வியாபாரம் கூட கைகூடவில்லை...
- ரயான் துணிக்கு பதிலாக குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படும் பாலிஸ்டர், நைலான் போன்ற துணிகள் அதிகளவில் வடிவமைக்கப்பட்டு, அவை அகமதாபாத் ,டெல்லி, மும்பை போன்ற பெருநகர சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது தான் இதற்கு காரணம்.
- இதனால் 25 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 120 கிராம் எடை கொண்ட ரயான் துணியின் ஒரு மீட்டரின் விலை தற்போது 24 ரூபாய் முதல் 24 ரூபாய் 25 பைசாவாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.