கெட்டுப்போன உணவில் அன்னதானம்..அதிகாரிகளின் அதிரடி ரெய்டு..!

Update: 2023-05-20 17:25 GMT

திருநள்ளாறு சனிஸ்வரர் கோயில் அருகே விற்பனை செய்யப்படும் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு சனிபகவான் கோயில் அருகில், விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன உணவு பறிமுதல் செய்யப்பட்டது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள யாசகர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். இதற்காக திருநள்ளாறு நளன்குளம் பகுதியில் சிலர் உணவு விற்பனை செய்து வருகின்றனர். இந்த உணவு தரமற்ற இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது துர்நாற்றம் வீசிய கெட்டுப்போன உணவு விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில வியாபாரிகள் கெட்டுப்போன உணவுகளை தூக்கி எறிந்து ஓடினர். இதையடுத்து கெட்டுப்போன உணவை பறிமுதல் செய்து அழித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்