"தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நன்கொடை மோசடி" - அறநிலையத்துறைக்கு மக்கள் கோரிக்கை
மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்கு, மாதம்தோறும் பவுணர்மி தினத்தன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நபர்களே தொடர்ந்து அறங்காவலர்களாக இருந்து வருவதாகவும், கோயிலில் வசூலாகும் காணிக்கை, பக்தர்களிடம் பெறப்படும் நன்கொடை தொடர்பான வரவு, செலவு கணக்குகளை பராமரிக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அரசு உத்தரவை மீறி பக்தர்களிடம் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபடுவது குறித்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோயில் அறங்காவலர் சிவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.