ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்... திமுக நிர்வாகியிடம் அதிரடி விசாரணை | DMK | Raid
சென்னை திருவல்லிக்கேணி லால்முகமது தெருவில் வசித்து வரும் பிரேம் ராஜா, திமுகவின் திருவல்லிக்கேணி பகுதி பொருளாளராக பதவி வகித்து வருகிறார். நேற்றிரவு இவருடைய வீட்டில், ஜி.எஸ்.டி புலனாய்வு பிரிவின் மூத்த அதிகாரி சீதாலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடத்திய சோதனையில், முக்கிய டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், பிரேம் ராஜாவை அவர்கள் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 20 ஆம்-ஆம் தேதி பிரேம் ராஜாவின் நெருங்கிய நண்பரான பெரம்பூரை சேர்ந்த பிரேம் நாதனை, வழக்கு ஒன்றில் ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, பிரேம்ராஜா வீட்டில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.