திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் கோடி கோடியாய் அள்ளிக்கொடுத்த பக்தர்கள்... எத்தனை கோடி தெரியுமா? - தேவஸ்தானம் ரிப்போர்ட்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் மட்டும், 71 ஆயிரத்து 894 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், இலவச தரிசனத்துக்கு, பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.