வசதியானோர் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களா? - அறிக்கை அளிக்க உத்தரவு
சென்னையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொது விநியோகத் திட்ட அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அதன்படி வசதி படைத்த நபர்கள், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், உணவுப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.