அப்பா-மகனை தாக்கிய திமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்த்த டிராபிக் காவலர்

Update: 2022-11-26 04:50 GMT

மது போதையில் திமுக நிர்வாகிகள் இணைந்து போலீசார் முன்னிலையில் அப்பா மகனை தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 20ம் தேதி அன்று திருப்பூர் டாஸ்மாக் கடை அருகே மது போதையில் இருந்த திமுக நிற்வாகிகள் மீது அந்த வழியாக வந்த கார் இவர்களை உரசுவது போல் சென்றது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், காரை நிறுத்தி அதில் இருந்த அப்பா மகனை கடுமையாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட போக்குவரத்து காவலர், வேடிக்கை மட்டுமே பார்த்து விட்டு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்