சொந்த கட்சிக்காரரையே ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய திமுக நிர்வாகி - பரபரப்பு சம்பவம்

Update: 2023-06-09 02:58 GMT

ஆவடி அருகே, திருமண பேனரில் பெயர் போடவில்லை என்பதற்காக, திமுக பிரமுகரை அக்கட்சி நிர்வாகிகள் தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாய ரெட்டி. அரசு பேருந்து ஓட்டுநரான இவர், வடபழனி பணிமனையின் தொ.மூ.ச. ஓட்டுநர் செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நண்பரின் மகள் திருமணத்திற்காக பேனர் வைத்துள்ளார். இவர், திமுக நிர்வாகிகளின் புகைப்படம் மற்றும் பெயரை அதில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, 7வது வார்டு பெண் கவுன்சிலரின் கணவர் சரவணன் மற்றும் 7வது வார்டு திமுக செயலாளர் முல்லை ராஜேந்திரன் ஆகியோர் அப்பாய ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பேனரில் ஏன் பெயர் போடவில்லை எனக் கேட்டு மிரட்டல் விடுத்ததோடு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த அப்பாய ரெட்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த அப்பாய ரெட்டி, காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கட்சி நிர்வாகிகள் சமாதானம் பேசி, மனுவை திரும்ப பெற வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்