- பொன்னேரி அருகே குடும்ப தகராறில், திமுக கவுன்சிலர் பெண்களை தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
- திருவள்ளூர் மாவட்டம், ஆலாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசுந்தரி மற்றும் காயத்திரி.
- உறவினர்களான இவர்களுக்குள் சொந்த வீடு அளப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக பொன்னேரி நகராட்சி 17-வது வார்டு திமுக கவுன்சிலர், தமது உறவுக்கார பெண்களை தாக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.