உடைந்து சிதறிய லாரியின் டீசல் டேங்க் - கிண்டி மேம்பாலத்தில் தொற்றிய பதற்றம்

Update: 2023-03-21 08:55 GMT
  • கிண்டி மேம்பாலத்தில் நடைபாதை தடுப்பு சுவரில் மோதிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • வாலாஜாபாத்திலிருந்து சைதாபேட்டை நோக்கி வந்த லாரி ஒன்று கிண்டி மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது.
  • அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டிப்பாட்டை இழந்த லாரி, மேம்பால நடைபாதையின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
  • இதில் மேம்பால சுவர் உடைந்ததுடன், லாரியின் டீசல் டேங்க் முழுவதும் உடைந்து டீசல் சாலையில் கொட்டியது.
  • இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தினர்.
  • இதனால், போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்