திருமணம் கைகூட தேடி வந்து வழிபடும் பக்தர்கள்...

Update: 2023-01-24 02:48 GMT

கருணையின் வடிவமாகவும், நாடி வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும் இருப்பவர் தான் கந்தன்..

கந்தனின் திருப்புகழை பாட வாய் மணக்கும்... கந்தனின் பெருமைகளை கேட்க கேட்க செவி நிறையும் என்பார்கள்..

அப்படியாக கந்தனின் புகழ்பாடும் கோயில்களில் ஒன்று தான் திருவாரூர் கந்தன்குடி கோயில்...

சகல உலகமும் தங்கள் வசமாக வேண்டும் என சிவபெருமானிடம் தவமிருந்து வேண்டினார்கள் அசுரர்கள்...

சிவபெருமானும் அவர்கள் வேண்டியதை வரமாக அளிக்கவே, அவர்களின் கர்வமும் அதிகரித்தது.

இதனால் அம்பன், அம்பரன் என்ற 2 அசுரர்கள் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்துள்ளனர்..

பொறுக்க முடியாத தேவர்கள் வேறு வழியின்றி சிவபெருமானிடம் சரணடைந்ததால், பார்வதி தேவியானவள் காளியை வரச் செய்து அசுரர்களை அழிக்க கட்டளையிட்டிருக்கிறாள்..

ஆனால் மிகுந்த கோபமுற்ற முருகப் பெருமான் காளி தேவி செல்வதற்கு முன்பாகவே அசுரர்களை அழிக்க சென்றுவிட்டார்..

முருகப் பெருமானை குழந்தையாக எண்ணி அவரை தடுத்த காளி தேவி அமைதி கொண்டு இங்கேயே குடி கொள்ள வேண்டும் கேட்டிருக்கிறார்..

காளி தேவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கந்தன் குடிகொண்ட இடம் தான் கந்தன்குடி கோயில் என்கிறது வரலாறு...

பின்னர் அசுரர்கள் இருவரையும் அழித்த காளி கந்தன்குடி அருகிலேயே அம்பரகத்தூரில் அமர்ந்திருக்கிறாள்...

இங்குள்ள இறைவனை கருணையின் கடாட்சம் என்று சொல்வதுண்டு..

இந்த ஊரில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு கால்கள் இரண்டும் மார்போடு மடங்கிய நிலையில் பெண் குழந்தை பிறந்ததாம்..

பல்வேறு அறுவை சிகிச்சை செய்தும் பலன் இல்லாததால் முருகனே கதி என்று வேண்டி மனமுருக வழிபட்டதால் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இங்கு மூலவராக கந்தனும், இச்சா சக்தியாக வள்ளியும், கிரியா சக்தியாக தெய்வானையும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.. சிவபெருமான் ஐராவதேசுவரராக அருள்பாலிக்கிறார்..

இங்குள்ள இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்..

திருமண தடை உள்ளவர்கள் மண கோலத்தில் இறைவனை வழிபடுவதால் திருமண பாக்கியம் உண்டாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது...

கோயிலானது காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்..

திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவும், தஞ்சாவூரில் பேருந்து நிலையத்தில் இருந்து 89 கிலோ மீட்டர் தொலைவும் பயணித்தால் கோயிலை வந்தடையலாம்...

பக்தர்களின் வேண்டுதல்களை நிவர்த்தி செய்து அருள் புரியும் கந்தனை வணங்குவோம் நல் வாழ்வு பெறுவோம்....

Tags:    

மேலும் செய்திகள்