பழனியில் குவிந்த அண்டை மாநில பக்தர்கள்... அலைமோதிய மக்கள் கூட்டம் - தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருப்பு
- கிருத்திகை தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
- விடுமுறை நாள் என்பதால், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகரித்ததால், தரிசனம் செய்ய ஐந்து மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.
- அதிகாலை முதலே பக்தர் கூட்டம் அலைமோதியதால், பொது தரிசனம், சிறப்பு மற்றும் கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர் கூட்டம் நிரம்பி வழிந்தது.