சூரமாகாளியம்மன் கோவிலில் தூக்குத்தேர் திருவிழா... தேரை தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்
தஞ்சை மாவட்டம் சூரப்பள்ளத்தில் உள்ள சூரமாகாளியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா பத்தாம் நாளை முன்னிட்டு தூக்குத் தேர் விமர்சையாக நடைபெற்றது. 40 அடி உயரம், 20 அடி அகலம், 6 டன் எடை கொண்ட சக்கரங்கள் இல்லாத தேரை, ஏராளமானோர் தோளில் சுமந்து சென்றனர். இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.