வந்தே பாரத் ரயிலின் பரிதாப நிலை - ரயில்வே அமைச்சகம் அதிரடி

Update: 2023-07-06 14:01 GMT

வந்தே பாரத் ரயில்களுக்கான கட்டணங்களை குறைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


2019 பிப்ரவரியில் வந்தே பாரத் ரயில் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது. முக்கிய நகரங்கள் இடையே பகல் நேரத்தில், விரைவாக பயணம் செய்ய இவை வகை செய்கின்றன.

தற்போது நாடு முழுவதும் 46 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ரயில்கள் நிரம்பி வழிகின்றன.

ஆனால் குறிப்பிட்ட சில வழித் தடங்களில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதால், அதை அதிகரிக்கச் செய்ய, ரயில் கட்டணங்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



போபால் - இந்தூர் வந்தே பாரத் ரயிலில் உள்ள மொத்த இருக்கைகளில் 29 சதவீதம் மட்டுமே நிரம்புகின்றன. இந்தூர் - போபால் வந்தே பாரத் ரயிலில் 21 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்புகின்றன.

இந்த ரயிலில் ஏ.சி சேர் கார் கட்டணம் 950 ரூபாயாகவும், எக்சிகியூட்டிவ் சேர் கார் கட்டணம் 1,525 ரூபாயாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை கணிசமாக குறைத்து, அதன் மூலம் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே துறை திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த வகையில், 32 சதவீத இருக்கைகளே நிரம்பும்

போபால் - ஜபல்பூர் வந்தே பாரத், 36 சதவீதமே நிரம்பும் ஜபல்பூர் - போபால் வந்தே பாரத் ஆகிய இரண்டு ரயில்களிலும் கட்டணங்களை குறைக்க திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயத்தில் சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் 100 சதவீதம் முன் பதிவு செய்யப்பட்டு, அனைத்து இருக்கைகளும் நிரம்புவது ஒப்பிடத்தக்கது.

காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயிலில், இந்தியாவிலேயே அதிகபட்சமாக 183 சதவீதம் வரை இருக்கைகள் முன் பதிவு செய்யப்படுகின்றன. இதில் காத்திருப்பவர்கள் எண்ணிக்கையும் அடங்கும்.


வந்தே பாரத் ரயில் கட்டணங்கள் குறைப்பு ?


போபால் - இந்தூர்

நிரம்புதல் - 29%

இந்தூர் - போபால்

நிரம்புதல் - 21%

ஏ.சி சேர் கார்

கட்டணம் ரூ.950

எக்சிகியூட்டிவ் சேர்

கட்டணம் ரூ.1,525

கட்டணங்களை

குறைத்து, பயணிகள்

எண்ணிக்கையை

அதிகரிக்க திட்டம்

போபால் - ஜபல்பூர்

நிரம்புதல் - 32%

ஜபல்பூர் - போபால்

நிரம்புதல் - 36%

சென்னை கோவை

வந்தே பாரத் ரயிலில்

நிரம்புதல் - 100%

காசர்கோடு - திருவனந்தபுரம்

காத்திருப்பவர்கள்

உள்ளிட்ட முன் பதிவு

நிரம்புதல் 183%

Tags:    

மேலும் செய்திகள்