தீயாய் பரவும் டெங்கு..எகிறும் பாதிப்பு எண்ணிக்கை.. நிரம்பி வழியும் கேரள மருத்துவமனைகள்

Update: 2023-07-23 03:38 GMT

கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களில் 325 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் பல்வேறு காய்ச்சல்களால் தினமும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. எர்ணாகுளம், கொல்லம், கோழிக்கோடு, பலக்காடு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் 325 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்