நாட்டையே உலுக்கும் டெங்குகாய்ச்சல் -நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.. 1.3 லட்சம் பேர் பாதிப்பு - 200 பேர் பலி
பெரு நாட்டில், அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அந்நாட்டில், கனமழை மற்றும் அதிக வெயில் போன்ற அசாதாரண காலநிலை நிலவி வருவதால், டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அங்கு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி 200-க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து டெங்கு பரவி வருவதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இடமின்மை பிரச்சினை காரணமாக, மருத்துவமனைக்கு வெளியே, தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.