டெல்லி டிராபிக் போலீஸ் இருவரால் வெளிநாட்டில் பறந்த மானம் - யூடியூபரிடம் செய்த காரியத்தால் பரபரப்பு

Update: 2023-07-24 11:50 GMT

தென்கொரிய யூடியூபரிடம் 5 ஆயிரம் ரூபாயை அநியாயமாக அபராதம் வசூலித்த காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்கொரிய யூ டியூபர் ஒருவர் தவறான பாதையில் வந்ததாகக் கூறி போக்குவரத்து விதிமீறல் என தெரிவித்து டெல்லி போக்குவரத்து காவலர்கள் இருவர் அவரிடம் அபராதம் கட்டுமாறு தெரிவித்துள்ளனர். அந்த யூ டியூபர் முதலில் 500 ரூபாயை எடுத்த நிலையில், "500 இல்லை... 5 ஆயிரம் ரூபாய்" எனக் கூறி யூ அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாயை அபராதமாக பெற்றுள்ளனர். ஆனால் அதற்கான ரசீதை அவர்கள் வழங்காமல் மாறாக கை குலுக்கி விட்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்த முழு சம்பவமும் யூ டியூபரின் வீடியோவில் பதிவான நிலையில், அதை அவர் தன் யூ டியூப் பக்கத்தில் பகிர்ந்ததன் அடிப்படையில் 2 காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்