நடப்பு சாம்பியன் ஆஸி.க்கு முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி - நியூசிலாந்து அணி அபார வெற்றி

Update: 2022-10-22 13:49 GMT

சிட்னி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து தொடக்க வீரர்கள் ஆலனும், கான்வேயும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை பவர்பிளேயில் நாலாபுறமும் சிதறடித்தனர்.

அதிரடியாக ஆடிய ஆலன், 42 ரன்னில் அவுட் ஆக, அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கான்வே அரைசதம் அடித்தார்.

கான்வேயின் அதிரடியால் நியூசிலாந்தின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் சென்ற நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து 200 ரன்கள் குவித்தது.

கான்வே 92 ரன்களுடனும், நீஷம் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அடுத்து 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 5 ரன்னுக்கும் கேப்டன் ஃபின்ச் 13 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 17 புள்ளி 1 ஓவரில் 111 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆனது.

இதனால் 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர் மற்றும் சவுதி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

92 ரன்கள் அடித்த கான்வே ஆட்டநாயகனாக தேர்வானார்.

Tags:    

மேலும் செய்திகள்