64 இஸ்லாமிய பெண்களை இந்து ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த மத போதகருக்கு கொலை மிரட்டல்

Update: 2022-12-15 17:17 GMT

உத்தரபிரதேசத்தில் 64 இஸ்லாமிய பெண்களை, இந்து மதத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த மத போதகருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பரேலி பகுதியில் இருக்கும் அகஸ்திய முனி ஆசிரமத்தை சேர்ந்த பண்டிட் கேகே சங்க்தர் என்பவர், கடந்த ஆறு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண்களை மதம் மாற்றி இந்து மதத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதுவரை 64 பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து வைத்ததால் கொலை மிரட்டல் வருவதாக கூறும் சங்க்தர், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென கேட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்