பிறந்தநாளில் காதலனை கொன்ற அப்பாவிற்கு தீராவலியை கொடுத்த காதலி.. உயிருடன் வந்து மீண்டும் உயிரை மாய்த்தார்..!

Update: 2023-06-11 06:47 GMT

காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறச் சென்ற காதலனை, பெண்ணின் உறவினர் அடித்து கொன்ற விவகாரத்தில், திடுக்கிட செய்யும் மற்றொரு மரணம் நிகழ்ந்திருக்கிறது. விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். 21 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் லோடு மேனாக பணிபுரிந்து வந்த நிலையில், செட்டிபாளையம் வசந்தம் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணான தன்யா என்பவரை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் இருவரின் வீட்டாருக்கு தெரியுமென்றும், முதலில் எச்சரித்த அவர்கள், பின்பு அடுத்த வருடம் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியதாக கூறப்படுகிறது...

இந்நிலையில், கடந்த ஜூன் நான்காம் தேதியன்று, தன்யாவுக்கு பிறந்த நாளான நிலையில், அவருக்கு வாழ்த்து கூற தனது நண்பர் மூவரை அழைத்துக்கொண்டு நள்ளிரவில் காதலியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் பிரசாந்த்....

அப்போது, நால்வரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், காதலியின் வீட்டு கதவை பிரசாந்த் தட்டிய போது , தன்யாவின் தந்தை மகாதேவன் மற்றும் அவரது உறவினர் விக்னேஷ் கதவை திறந்துள்ளனர்....

அப்போது, பிரசாந்த் மதுபோதையில் இருந்ததாகவும், அதனால் காதலியின் தந்தை மற்றும் உறவினருடன் தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது...

இதனால், திடுக்கிட்டு எழுந்து வந்த காதலி தன்யாவின் முன்பே, அவரது உறவினர் பிரசாந்தை கத்தியால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது....

இதை பார்த்து அவரது காதலி கதறிய நிலையில், நள்ளிரவில் ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள முடியாமல், தாங்கள் வந்த சக்கர வாகனத்திலே பிரசாந்தை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். செல்லும் வழியில் வாகனம் பஞ்சராக, தட்டு தடுமாறி பிரசாந்த்தை மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பெண்ணின் தந்தை மகாதேவன் மற்றும் உறவினர் விக்னேஷை கைது செய்த போலீசார், விக்னேஷை மட்டும் சிறையிலடைத்தனர்.

காதலன் உயிரிழந்த அன்றிரவே வீட்டிலிருந்த சாணி பவுடரை குடித்து தன்யா தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

உடனே, அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த தன்யா, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்..

காதலனை இழந்த சோகத்தில் மனவேதனையில் மீளாதுயரத்தில் இருந்த அவர், சிகிச்சையில் உயிர் பிழைத்து வீடு திரும்பிய அன்றே தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது....

காதலனுடன் எதிர்கால வாழ்க்கையை கனவு கண்டு வாழ்ந்து வந்த இளம் பெண், அந்த கனவை அவரது உறவினர்களே கலைத்த சோகத்திலும், காதலனை இழந்த துயரத்திலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்