கிரிப்டோ கோப்பை சர்வதேச செஸ் தொடரின் 5ம் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவினார். 5ம் சுற்றில் வியட்நாமைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் லீ குவாங் லியம் உடன் பிரக்ஞானந்தா மோதினார். இதில் 2 புள்ளி 5 புள்ளிகள் பெற்று வியட்நாம் வீரர் வெற்றி பெற்றார். இதனால் கிரிப்டோ கோப்பை தொடரில் முதல் தோல்வியை சந்தித்த பிரக்ஞானந்தா, 12 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார். 13 புள்ளிகளுடன் நார்வேவைச் சேர்ந்த முன்னணி வீரர் கார்ல்சன் முதலிடத்தில் உள்ளார்