சென்னையில் பிரபல நடிகையின் கணவன் நடத்தும் ரிசார்ட்டில் தங்கிய காதலர்களுக்கு நடந்த கொடுமை

Update: 2023-05-21 04:56 GMT

சென்னை, கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்துள்ள பரமன்கேனியில் பண்ணை வீடு நடத்தி வருபவர் காதல் பட நடிகை சந்தியாவின் கணவர் வெங்கடேசன்... chill க்ளைமேட், கடற்கரை ஓரம், நீச்சல் குளத்துடன் கூடிய வசதி என காதலர்கள் முதல் குடும்பஸ்தர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கு தளமாக இருந்துள்ளது இந்த பண்ணை வீடு...

சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் சென்னை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பலர் வந்து இந்த பண்ணை வீட்டில் வீக் எண்டை Vibe செய்வது வழக்கம்...

அவ்வாறு, சென்னையை சேர்ந்த 25 வயதான இளைஞர், தனது காதலி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, இந்த பண்ணை வீட்டில் 3 அறைகள் எடுத்து தங்கியுள்ளார்...

அங்கு, தனது காதலியுடன் இளைஞர் தனியாக அறை எடுத்த நிலையில், அந்த அறையை பராமரிக்கும் பொறுப்பு, அங்கு ரூம்பாயாக பணிபுரிந்த சென்னை, சீக்கினாங்குப்பத்தை சேர்ந்த சுபாஷுக்கு வழங்கப்பட்டுள்ளது...

பகலில் காதலி மற்றும் நண்பர்களுடன் Vibe செய்து டையர்டாக இருந்த இளைஞர், இரவில் தனது காதலியுடன் அறையில் தூங்கியுள்ளார்.. இவர் தங்கியிருந்த அறை உள்பக்கம் தாழிட்டு கொண்டாலும், வெளிப்பக்கம் மூலம் எளிதாக திறக்கும் தாழ்பாளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது...

இதை அறிந்திருந்த ரூம் பாய் சுபாஷ், இரவு டையர்டாக தூங்கி கொண்டிருந்த காதலர்களின் அறைக்குள் நைசாக நுழைந்து, நாசுக்காக ராமுவிற்கும் அவரது காதலிக்கும் இடையே படுத்திருக்கிறார்...

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அருகில் படுத்திருந்த பெண்ணிடம் அவரது காதலனாக தன்னை காட்டிக் கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார் ....

இதில், வித்தியாசமான உணர்வையும், அசாதாரணமான சூழலையும் உணர்ந்த பெண் சட்டென எழுந்து அறையின் லைட்டை ஆன் செய்த போது, காதலன் நன்கு தூங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போயுள்ளார்..

உடனே, பெண் கூச்சலிட்டதை கேட்டு அவரது காதலன் உட்பட அனைவரும் எழுந்த நிலையில், நடந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்...

தொடர்ந்து, அறை முழுவதும் நடத்திய சோதனையில், கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த ரூம்பாயை வசமாக பிடித்த அவர்கள் சரமாரியாக தாக்கி, போலீசிடம் ஒப்படைத்தனர்...

இதில், இளைஞர்கள் மற்றும் அவரது நண்பர்கள் தொடுத்த தாக்குதலால் காயமடைந்த சுபாஷை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தீவிர விசாரணை நடத்தினர்....

விசாரணையில், அடுத்த பரபரப்பு வெளியாகி சூடு பிடித்தது... விசாரணைக்காக சுபாஷின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில், இதுவரை பண்ணை வீட்டிற்கு வந்து சென்ற பல பெண்களின் ஆபாச வீடியோக்களும், குளியலறை வீடியோக்களும் இருந்தது அவர்களை அதிர்ச்சியடைய செய்தது...

இந்த சம்பவம் சுற்றுலா விரும்பிகளுக்கும், பண்ணை வீடு பிரியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ள நிலையில், இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளதாகவும், அடுத்தகட்ட விசாரணை பல திருப்பங்கள் ஏற்பட்டு ஏகப்பட்ட உண்மைகள் வெளிவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்