8 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்... அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர்.சிபிசிஐடிக்கு கை மாறிய வழக்கு
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவி கூட்டு பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரையும் நீதிமன்ற காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பரமக்குடியில் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்ட நிலையில், சிவகங்கை மாவட்ட சிபிஐடி அதிகாரி கீதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
- இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.