சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணா நகர், மதுரவாயல், திருவேற்காடு, கொரட்டூர் உள்ளிட்ட பகுதியில் ஆவின் பால் கிடைப்பதில்லை என அவர்கள் புகார் கூறியுள்ளனர். தாமதமாக கிடைக்கும் ஆவின் பாலும், சில சமயங்களில் கெட்டுப்போவதாக கூறும் இல்லத்தரசிகள், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.