நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா... அவசரமாக நடக்கவுள்ள ஆலோசனை

Update: 2023-03-27 09:02 GMT
  • டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 153 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இதற்கிடையில் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தயார் நிலை குறித்து நேற்றைய தினம் தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
  • ஒத்திகையின் போது, ​​ஆம்புலன்ஸ், அவசரகால சேவைகள், கோவிட் வார்டுகள், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் இருப்பு உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டது.
  • டெல்லி அரசு மருத்துவமனைகளில் ஒன்றான லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் 2 ஆயிரம் படுக்கைகளில் 450 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
  • இவை அனைத்தும் ஆக்ஸிஜன் வசதிகள் கொண்டவை என்றும், தற்போது இங்கு 2 கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
  • டெல்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், குறைபாடுகள் நீக்கப்படும் என்றும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்தார்.
  • மேலும், கட்டுப்பாடுகள் தொடர்பான பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
  • இந்நிலையில், அனைத்து மாநில சுகாதார செயலாளர்கள் உடன் மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூசன் காணொளி வாயிலாக இன்று ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்