மீண்டும் அசுரவேகத்தில் கொரோனா... "உலகிற்கே ஆபத்து எழலாம்" - வல்லுநர் அதிர்ச்சி எச்சரிக்கை

Update: 2022-12-20 16:49 GMT

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சீனாவில் மருத்துவமனைகளில் படுக்கைகள் கொரோனா நோயாளிகளால் நிறைந்து வழிவதாக அமெரிக்க மருத்துவ வல்லுநர் எரிக் ஃபெய்ஜல் டிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள தகவலில், இன்னும் 3 மாதங்களில் சீனாவில் 60 % மக்கள் அதாவது உலகில் 10 % மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையே சீனாவில் அதிகரிக்கும் வைரசால் வைரஸ் உருமாற வாய்ப்பு உள்ளது என கூறும் சுகாதாரத்துறை வல்லுநர்கள், உலக நாடுகள் கவனமாக இருத்தல் அவசியம் என்ற அறிவுரையையும் முன்வைக்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்