அமெரிக்காவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா? - "முதியவர்களுக்கு சவால் ஆகப் போகும் இந்தக் குளிர்காலம்"
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அதிக அளவில் முதியவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருக்கிறது என நிம்மதி அடைவதற்குள், மெல்ல மெல்ல அதன் பாதிப்பு மீண்டும் எட்டிப்பார்த்து வருகிறது.
சில மாதங்களாகவே பிரிட்டன் உள்பட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் குறிப்பிட்ட அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் சில வாரங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, முதியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிக அளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் தேசிய அளவில் கடந்த மாதம் 15ஆம் தேதியன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கு 8.8 என இருந்தது, கடந்த 6ஆம் தேதி 12.1 ஆக அதிகரித்துள்ளது.
இந்தக் குளிர்காலம் அமெரிக்க முதியவர்களுக்கு நல்லபடியாக இருக்காது என அமெரிக்க சுகாதார, மானுட சேவைகள் துறை அச்சம் தெரிவித்துள்ளது.