கொரோனா ஊரடங்கின் காரணமாக பதின்ம வயதினர் மூளை குழம்பிப் போயுள்ளதாக அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மன அழுத்தத்தின் காரணமாக பதின்ம வயதினர் மூளை வேகமாக வயதாகி வருவதாகவும், ஏகப்பட்ட குழப்பமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்குப் பிறகு கடுமையான மன நல பிரச்சினைகள், கவலை, மனச்சோர்வு ஆகியவை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.