மாணவி ஸ்ரீமதி எழுதிய கடிதம் குறித்து சர்ச்சை கட்டுரை-சென்னை வந்து கைது செய்த போலீஸ்
சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வரும் சாவித்திரி கண்ணன், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி விவகாரம் தொடர்பாக தனது இணையதளத்திலும், முகநூல் பக்கத்திலும் தவறான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மாத இதழ் ஒன்றில், மாணவி எழுதிய கடிதம் குறித்து சர்ச்சைக்குள்ளாக கட்டுரை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார், சென்னை வந்து சாவித்திரி கண்ணனை, கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ஒலக்கூர் காவல்நிலையத்தில் வைத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.