பெண்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு பாபா ராம்தேவ், மன்னிப்பு கோரினார். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், கடந்த 25ஆம் தேதி யோகா அறிவியல் முகாம் நடைபெற்றது. அப்போது பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்த நிலையில், இது குறித்து பாபா ராம்தேவ் விளக்கம் அளிக்க வேண்டும் என, மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணைய தலைவர் ரூபாலி சஹான்கர் உத்தரவிட்டார். இதனிடையே, பெண்களை அவமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனவும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பும் கோருவதாகவும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.