காங். மூத்த தலைவர் சென்ற கார் விபத்து.. குறுக்கே பைக் வந்ததால் நேர்ந்த விபரீதம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

Update: 2023-03-10 10:50 GMT

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கரில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் பயணித்த காரின் மீது பைக் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திக் விஜய் சிங் கார் வந்த சமயத்தில் பைக்கில் வந்தவர் யூ டர்ன் எடுத்துள்ளார்... அந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது... இதில் பைக்கில் வந்த 20 வயது இளைஞர் ராம்பாபு பக்ரி காயம் அடைந்த நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை திக் விஜய் சிங் உறுதி செய்துள்ளார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் வாகனம் மெதுவாக சென்றதால் பைக் ஓட்டியவருக்கு பெரிய காயமில்லை என தெரிவித்தார்... இந்நிலையில், விபத்து பதிவான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்